முல்லைத்தீவில் புலிகளுக்கு சார்பான துண்டுப்பிரசுரங்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான துண்டுப் பிரசுரங்கள், முல்லைத்தீவு – முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வீதியோரங்களில் வீசப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

‘வடக்கில் எமக்கு புதிய சூரியன்’ எனும் தலைப்பிடப்பட்டிருந்த இந்த துண்டுப் பிரசுரங்களில் விடுதலைப் புலிகள் இயங்கத்தின் உத்தியோகபூர்வ சின்னம் மாத்திரமே பொறிக்கப்பட்டிருப்பததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இவ்வாறு வீதியில் வீசப்பட்டுள்ள சுவரொட்டிகள் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related Posts