முல்லைத்தீவு கடற்தொழில் நீரியல்வள திணைக்களத்துக்குள் அத்துமீறி நுழைந்து மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவிவருதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத மீன்பிடியை தடை செய்யக் கோரி இன்று (வியாழக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் திடீரென அத்துமீறி நீரியல்வள திணைக்களத்துக்குள் நுழைந்துள்ளனர்.
இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்களினால் நீரியல்வளத் திணைக்களத்தின் ஜன்னல் கண்ணாடிகளும் அடித்து உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வட. மாகாண மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வலியுறுத்தி நேற்று மன்னாரிலும் கவனயீர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.