முல்லைத்தீவில் தமிழ் மக்களின் காணிகள் திட்டமிட்ட வகையில் அபகரிப்பு !!

முல்லைத்தீவு, கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட எல்லைக் கிராமமான கருநாட்டுக் கேணியிலுள்ள தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்து.

குறித்த பகுதியில் பொலிஸ் நிலையத்தை சூழவுள்ள தமிழர்களுக்குரிய காணிகளே அபகரிக்கப்பட்டு 180 சிங்கள குடும்பங்களை குடியேற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினால் இந்த சிங்கள குடியேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில் குறித்த காணிகளை பார்வையிடுவதற்கு, மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்கள், கரைதுறைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் நேற்று கருநாட்டுக்கேணி பகுதிக்கு சென்றிருந்தனர்.

இதன்போது குறித்த ஆக்கிரமிப்புச் செயற்பாட்டிற்கு முன்னாள் வடமாகாண சபை துரைராசா ரவிகரன் மற்றும் காணிகளின் சொந்தக்காரர்களான தமிழ் மக்கள் ஆகியோர் இணைந்து தமது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்ட தமிழ் மக்களின் பூர்வீக எல்லைக் கிராமங்களான கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளில் உள்ள தமிழ் மக்களின் பூர்வீக நீர்ப்பாசன வயல் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வெலிஓயா பகுதி சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்ற நிலையிலேயே புதிய ஆக்கிரமிப்பு முயற்சி நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Posts