முல்லைத்தீவில் குடும்ப பெண்மீது கத்திக்குத்து!!

முல்லைத்தீவில் குடும்ப பெண்மீது கணவர் நடத்திய கத்திக்குத்து தாக்குதல் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முல்லைத்தீவு மருத்துவமனைக்கு முன்பாக நேற்று (31.12.2023)குறித்த பெண் நின்றுக்கொண்டிருந்ததாகவும், இதன்போதே கணவரால் கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், படுகயாமடைந்த பெண் ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதான மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Related Posts