Ad Widget

முல்லைத்தீவில் காணாமற்போனோர் குறித்த சாட்சியங்கள் பதிவு!

காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான சாட்சியப் பதிவு விசாரணைகள் நேற்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. நேற்று காலை 9 மணிமுதல் இடம்பெற்ற இவ் விசாரணையில் 120 பேர் சாட்சியம் அளித்துடன், காணாமற்போனோர் குறித்து 23 புதிய பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டன.

நான்கு பிரிவுகளாக இந்த விசாரணைகள் இடம்பெற்றன. இன்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்டவர்கள் சாட்சியம் அளித்தனர். இந்த சாட்சிப்பதிவுகள் இன்று மற்றம் நாளையும் தொடரவுள்ளன. காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் வட மாகாணத்திற்கான இறுதிக்கட்ட சாட்சிப்பதிவுகளே நேற்று ஆரம்பமாகின.

வட மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் இடம்பெறவுள்ள இந்த விசாரணைகள் இன்றிலிருந்து எதிர்வரும் 30ஆம் திகதி வரையான ஆறு தினங்களுக்கு நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts