முல்லைத்தீவு ஒதியமலைப் பகுதியில் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில், ஒருவரின் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
நெடுங்கேணிப் பகுதியில் ஒருவர் காணாமல்போன சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இம்மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
நெடுங்கேணியில் கடந்த ஏப்ரல் மாதம் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில், அது குறித்து செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து இருவர் கைது செய்யப்பட்டனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே குறித்த மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.