முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட விவகாரம் – இருவர் கைது!

முல்லைத்தீவு – முறிப்பு பகுதியில் இரண்டு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முறிப்பு பகுதியில் மரக்கடத்தல் இடம்பெறுவதாகக் கிடைத்த தகவலுக்கமைய செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் இருவர் மீது கடந்த திங்கட்கிழமை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது காயமடைந்த குறித்த ஊடகவியலாளர்கள் இருவரும், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்தநிலையிலேயே இந்த சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts