முல்லைத்தீவில் ஊடகவியலாளரின் வீடு புகுந்து கொள்ளை!

முல்லைத்தீவு கரைச்சிக்குடியிருப்பில் அமைந்துள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டை உடைத்து கமரா மற்றும் மடிக்கணணிகள் களவாடப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

குறித்த ஊடகவியலாளரின் வீட்டில் நேற்று பகல் வேளை வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த பெறுமதியான இரண்டு கமராக்கள் மற்றும் மடிக்கணணி என்பன திருடப்பட்டுள்ளது.

இந்த கொள்ளைச் சபம்வம் குறித்து முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது பொலிஸார் புலன் விசாரணையினை மேற்கொண்டு வருகின்றார்கள்.

பொருளாதாரம் நலிவுற்ற நிலையிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து நாளாந்தம் நடக்கும் நிகழ்வுகளை ஊடகங்களுக்கு வெளிக்கொணர்ந்து ஊடக சேவையினை செய்துவந்த ஊடகவியலளருக்கு மேலும் பின்னடைவினை ஏற்படுத்தும் முகமாக இந்த கொள்ளைச் சம்பவம் பதிவாகியுள்ளது.

Related Posts