முல்லைத்தீவு பகுதியில் இராணுவ பஸ் மீது கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஹர்த்தால் இடம்பெற்ற போது இவ்வாறு கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் ரொசான் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு பகுதியை கடந்த போது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இந்த சம்பவம் குறித்து முல்லைத்தீவு காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.