முல்லைத்தீவில் ஆசிரியர் தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதி!!

முல்லைத்தீவு – ஆரோக்கியபுரம் தமிழ் வித்தியாலயத்தில் தரம் ஐந்தில் கல்வி பயிலும் மாணவனொருவனை ஆசிரியர் ஒருவர் கடுமையாக தாக்கியமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் (01.04.2024) இடம்பெற்றுள்ளது.

இதன்போது குறித்த பாடசலையைச் சேர்ந்த நாகராசா ஜோன்சன் என்ற மாணவனே இவ்வாறு தாக்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிகப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆரோக்கியபுரம் தமிழ் வித்யாலயத்தில் தரம் ஐந்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனுக்கு நேற்று முன்தினம் ஆசிரியர் ஒருவர் தடியால் தாக்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து தாக்கப்பட்ட மாணவன் அக்கராயன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் அக்கராயன் குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts