முல்லைத்தீவிலும் கிளிநொச்சியிலும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அமோக வெற்றி! 9 இல் 7 ஆசனங்கள் கைப்பற்றிவிட்டது!

கிளிநொச்சி மாவட்டத்தின் தபால் மற்றும் வாக்களிப்பு நிலையத்தில் அளிக்கப்பட்ட வாக்களிப்பின் உத்தியோக பூர்வ முடிவுகளின் படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு 3 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியைப் பெற்றுள்ளது.

அதன்படி பதிவாகிய வாக்குகள் 68600,
அளிக்கப்பட்ட வாக்குகள் 50194,
செல்லுபடியான வாக்குகள் 45459,
நிராகரிப்பு 4735,
த.தே,கூ பெற்ற வாக்குகள் 37079,
ஐ.ம.சு.மு 7897, ஐ.தே.க 54,
ஈழவர் ஜனநாயக முன்னணி 300,
சுயேட்சை 01- 07 ,
ஜனநாயக ஐக்கிய முன்னணி 61, மக்கள்
விடுதலை முன்னணி 18,
சுயேட்சை 02-22, ஜனநாயக்கட்சி 05,
இலங்கை தொழிலாளர் கட்சி 04,
ஜனசய பரமுன 02,
லங்கா சமசமாசக் கட்சி 06 வாக்குகளைப் பெற்றுள்ளது.

இதனடிப்படையில் த.தே.கூ -03 ஆசனங்களையும் ஐ.ம.சு.மு -01 ஆசனங்களையும் பெற்றுள்ளது. இதனடிப்படையில் 73.17 வீதமான முடிவுகள் பெறப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் த.தே.கூவிற்கு 4 ஆசனங்களைப் பெற்று பாரிய வெற்றி பெற்றுள்ளது முல்லைத்தீவு மாவட்டத்தின் தபால் மற்றும் வாக்களிப்பு நிலையத்தில் அளிக்கப்பட்ட வாக்களிப்பின் உத்தியோக பூர்வ முடிவுகளின் படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியைப் பெற்றுள்ளது.

அதன்படி பதிவாகிய வாக்குகள் 53683,
அளிக்கப்பட்ட வாக்குகள் 38802,
செல்லுபடியான வாக்குகள் 35982,
நிராகரிப்பு 2820,
த.தே,கூ பெற்ற வாக்குகள் 28266,
ஐ.ம.சு.மு 7209,
மு.கா 199,
ஐ.தே.க 197,
சுயேட்சை 01-44,
மக்கள் விடுதலை முன்னணி 30,
சுயேட்சை 02- 10,
ஜனநாயக்கட்சி 02,
இலங்கை தொழிலாளர் கட்சி 02,
ஜனசய பரமுன 05,
லங்கா சமசமாசக் கட்சி 06 வாக்குகளைப் பெற்றுள்ளது.

இதனடிப்படையில் த.தே.கூ -04 ஆசனங்களும் ஐ.ம.சு.மு -01 ஆசனமும் கிடைத்துள்ளது.

தற்போது விருப்பு வாக்குகள் எண்ணும் பணி இடம்பெற்றுக் கொண்டுள்ளதுடன் அதற்கான முடிவுகளும் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

Related Posts