முற்றவெளியில் வடக்கு கைத்தொழில் கண்காட்சி ஆரம்பம்!!

வடக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூர் கைத் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் கண்காட்சி வடக்கு மாகாண இணைப்பாளர் கு,ரவிக்குமார் தலைமையில் யாழ்ப்பாணம் முற்றவெளியில் நேற்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சுமற்றும் தேசிய கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் வர்த்தக தொழிற்துறை மன்றமும் இணைந்து இந்தக் கண்காட்சியை நடாத்துகின்றன.

இந்தக் கண்காட்சியில் இயற்கை முறை விவசாய பயிர்கள், மா வகைகள், எண்ணெய் வகைகள்,பனம் உற்பத்தி பொருட்கள் ,பால் உற்பத்தி பொருட்கள் ,துணி வேலைபாடுகள்,மர வேலை பாடுகள் ,மூலிகை, குடிபானங்கள்,கடதாசி உற்பத்திகள்,உணவுகள், இயற்கையான மரக்கறிகள் போன்ற 70 க்கும் அதிமான விற்பனை காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த கண்காட்சி 3 நாள்கள் தொடர்ந்து நடைபெறும்.

Related Posts