முறைப்பாடுகளை அறிவிக்க செல்லிடத் தொலைபேசி மற்றும் குறுஞ் செய்தி வசதிகள்

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிக்க செல்லிடத் தொலைபேசி மற்றும் குறுஞ் செய்தி வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

பொதுமக்களுக்கு இந்த சேவைகளை பயன்படுத்தி தேர்தல் வன்முறை தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்கலாம் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் செயலகத்தில் குறுஞ் செய்தி வசதி தொடர்பான அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது.

1919 எனும் அவசர இலக்கத்துடன் தொடர்புகொண்டு EC இடைவெளி E இடைவெளி மற்றும் மாவட்டத்தின் பெயரை குறிப்பிட்டு முறைப்பாடுகளை அறிவிக்கலாம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related Posts