முறிகண்டியில் ரயிலுடன் மோதி 27 இற்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழப்பு!

முறிகண்டிப் பகுதியில் ரயிலுடன் மோதி 27 இற்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பல மாடுகள் காயமடைந்துள்ளன.

ஸ்கந்தபுரம், கிளிநொச்சியைச் சேர்ந்த கால்நடைப் பண்ணையாளர் ஒருவர் தனது கால்நடைகளை திருமுறிகண்டிப் பகுதியில் வைத்துப் பராமரித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று குறித்த கால்நடைகளை மேய்ச்சலிற்காக திறந்து விட்ட நிலையில், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த ரயிலில் குறித்த கால்நடைகள் மோதியதால் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Related Posts