ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த முருகன், ரோபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய மூவரும் இன்று காலை அவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், ரோபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய மூன்று இலங்கைப் பிரஜைகளும் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பின்னர் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்
அவர்கள் மூவரும் திருச்சி முகாமிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் நேற்று இரவு சென்னைக்கு அழைத்து வரப்பட்டநிலையில், இன்று காலை 10 மணிக்கு கொழும்பு வரும் விமானம் மூலம் மூவரையும் பொலிஸார் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் அண்மையில் சாந்தன் உயிரிழந்த நிலையில், எஞ்சிய மூவரும் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து அவர்களை இலங்கைக்கு அனுப்ப இந்திய மத்திய அரசு அனுமதியளித்த நிலையில் அவர்கள் நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.