முருகன், சாந்தன், பேரறிவாளன் தண்டனை ரத்து சரியான தீர்ப்பே!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரணதண்டனை ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக இந்திய மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை இந்திய உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.

மரணதண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரணதண்டனை ரத்துச் செய்தும், அவர்களுக்கான தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைத்தும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சதாசிவம் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த தண்டனைக் குறைப்புக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வின் முன்பாக, இந்திய மத்திய அரசு மனுத்தாக்கல் செய்திருந்தது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், மரணதண்டனையை ரத்துச் செய்து அளிக்கப்பட்ட தீர்ப்பு சரியானதே என்று, நீதிபதி தத்து தலைமையிலான அரசியலமைப்பு அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

எனினும், ராஜீவ்காந்தி கொலை தொடர்பில் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரின் விடுதலை தொடர்பான வழக்கு இன்னமும் விசாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Posts