முரளி கிண்ண கிரிக்கெட் நேற்று ஆரம்பம்

வருடந்தோறும் நடைப்பெற்று வருகின்ற முரளி கிண்ணம் கிரிகெட் சுற்றுப் போட்டி 2015 நேற்று கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது.

நேற்று காலை ஒன்பது மணிக்கு இலங்கை கிரிகெட் அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் குமார் சங்ககார விசேட அதிதியாக கலந்துகொண்டு முதலாவது போட்டியை ஆரம்பித்து வைத்தார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாங்குளம் போன்ற இடங்களில் இடம்பெறுகின்ற இப்போட்டியில் 23 அணிகள் பங்குப்பற்றுகின்றன.

மாங்குளம் மைதானத்தில் முரளி கிண்ணம் கிரிகெட்டின் பெண்களுக்கான போட்டி இடம்பெற்று வருகிறது.

கிளிநொச்சி இன்றைய முதலாவது போட்டி கிளிநொச்சி அணியினருக்கும். கொழும்பு ஆனந்தா கல்லூரிக்கும் இடையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது கிளிநொச்சியில் தெரிவு செய்யப்பட்ட 20 மாணவர்களுக்கு நற்குணம் முன்னேற்ற அமைப்பினால் வழங்கப்பட்ட துவிச்சக்கர வண்டிகளை மாணவர்களிடம் குமார் சங்ககார வழங்கி வைத்தமை நிகழ்வின் சிறப்பம்சமாக அமைந்தது

murali-cup-2015-1

murali-cup-2015-2

murali-cup-2015-3

Related Posts