முரளி கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டி ; ஆரம்பித்து வைத்தார் சங்கா

இலங்கையிலுள்ள இளம் கிரிக்கெட் வீரர்களிடையே நட்புறவை பேணும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட முரளி கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டி தொடர்ந்தும் 5 ஆவது முறையாக இன்று (21) ஆரம்பமாகவுள்ளது.

sanga-murali-cup-1

இதன் ஆரம்ப நிகழ்வு கிளிநொச்சி இரணைமடு நிலும்பியசவில் நேற்று மாலை மூன்று மணியளவில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இலங்கை கிரிகெட் அணியின் முன்னாள் தலைவரும், விக்கெட் காப்பாளருமான குமார் சங்கக்கார விசேட அதிதியாக கலந்துகொண்டு ஆரம்ப நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிலையில் இந்த போட்டிகள் இம்மாதம் 21 திகதி முதல் 25 ஆம் திகதிவரை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, ஒட்டுசுட்டான், மாங்குளம்,போன்ற பகுதிகளில் இருபதுக்கு இருபது போட்டிகளாக நடத்தப்படவுள்ளன.

sanga-murali-cup-2

இப்போட்டியில் 16 ஆண்கள் அணி மற்றும் 8 பெண்கள் அணி பங்கேற்கும் இந்த போட்டியின் இறுதி போட்டி கிளிநொச்சி மத்திய கல்லூரியின் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

குறித்த முரளி கிண்ண தொடராரை இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts