உலக சாதனையாளராக திகழும் இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் மீது, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அதிருப்தி அடைந்துள்ள நிலையில், குமார் சங்கக்கார அவருக்கு ஆதரவளிக்கும் வகையில் டுவிட்டர் பதிவொன்றை வௌியிட்டுள்ளார்.
முரளி இலங்கையின் சிறந்த குடிமன் எனவும் அவர் நாட்டை நேசிப்பதாகவும் சங்கக்கார தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அத்துடன், முரளிதரனுக்கு எவருக்கும் பயிற்சியளிக்க அல்லது ஆலோசனை வழங்க சுதந்திரம் உள்ளதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இலங்கை அணிக்கு பயிற்சியளிக்குமாறு கோரினால் அதனை முரளி ஏற்பார் எனவும், அவர் களத்தில் இருந்த போதும் வௌியேறிய போதும் தனது நாட்டுக்கு சிறந்ததையே வழங்கியதாகவும் சங்கக்கார தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இலங்கையைச் சேர்ந்த எந்தவொரு சுழற்பந்து வீச்சாளரும் முரளியை அனுகி உதவி கோரின் அவர்களுக்கு பயிற்சியளிக்க அவர் முன்னிற்பார் எனவும் சங்கா குறிப்பிட்டுள்ளார்.