மும்மொழிகளும் அடங்கிய பிறப்புச் சான்றிதழை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பதிவாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.
அந்தவகையில், சிங்கள மொழியில் வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழுக்கு மேலதிகமாக ஆங்கில மொழியில் குறித்த சான்றிதழ் மொழிபெயர்க்கப்பட்டு வழங்கப்படவுள்ளது.
அதேபோல் தமிழ்மொழியில் வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழுக்கு மேலதிகமாக ஆங்கில மொழியில் சான்றிதழ் மொழிபெயர்க்கப்பட்டு வழங்கப்படவுள்ளது.
இந்த நடவடிக்கை வரும் ஏப்ரல் மாதத்திற்குள் ஆரம்பிக்கப்படும் என பதிவாளர் நாயகம் என்.சி. சத்துர விதானகே குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எதிர்வரும் காலங்களில், பதிவாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் விசேட பாதுகாப்பு நடைமுறையின் கீழ் பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.