மும்பை இந்தியன்ஸின் பயிற்றுவிப்பாளராக பொன்டிங்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பங்குபற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொன்டிங் பொறுப்பேற்றுள்ளார்.

Mumbai-Indian-Team-Head-Coach-Ricky-Ponting

2013ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக ரிக்கி பொன்டிங் விளையாடி இருந்தார்.

அதனைத் தொடர்ந்து அவர் டுவெண்டி-20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர், பயிற்றுவிப்பு துறையில் கால் பதித்துள்ளார்.

உலகின் சிறந்த தலைவராகவும் சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராகவும் போற்றப்படும் பொன்டிங் முதற் தடவையாக பயிற்றுவிப்பு துறையில் கால் பதித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணி திங்கட்கிழமை (30) தமது பயிற்சிகளை ஆரம்பித்து இருந்தது.
வீரர்கள் முழுமையாக அணியுடன் இணையாத போதும் நான்காம் திகதி அனைவரும் இணைந்து விடுவார்கள் என கூறப்படுகின்றது.

உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடிய வீரர்கள் மூன்று பேர் இந்த அணியில் உள்ள அதேவேளை, உலகக்கிண்ண தொடரில் பங்குபற்றிய வீரர்கள் 7 பேர் மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ளனர்.

பலமான அணியாக தென்படும் மும்பை இந்தியன்ஸ் அணி ரிக்கி பொன்டிங்கின் பயிற்றுவிப்பில் எவ்வாறு செயற்படப்போகின்றது மற்றும் அவரின் பயிற்றுவிப்பு திறமை என்பவற்றை கிரிக்கெட் உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது.

இதேவேளை, சச்சின் டெண்டுல்கர், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகராக செயற்பட்டு வருகின்றார். தலை சிறந்த வீரர்கள் இருவரின் கூட்டணி எப்படி அமையப் போகின்றது என்ற எதிர்பார்ப்பும் அதிகமா உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts