மும்பை இண்டியன்ஸ் ஆலோசகர் பதவி: கும்ப்ளே ராஜிநாமா

மும்பை இண்டியன்ஸ் கிரிக்கெட் அணியின் தலைமை ஆலோசகர் பதவியை அனில் கும்ப்ளே ராஜிநாமா செய்துள்ளார்.

2013 ஜனவரி முதல் மும்பை அணியுடன் இணைந்து செயல்பட்டு வந்த கும்ப்ளே, கிரிக்கெட் விளையாட்டில் உள்ள மற்ற வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தனது பதவியை ராஜிநாமா செய்ததாக தெரிவித்துள்ளார்.

இரட்டை ஆதாய பதவிகளுக்கு எதிராக பிசிசிஐ தீவிர நடவடிக்கை மேற்கொண்ட நிலையில் கும்ப்ளே தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

முன்னதாக கும்ப்ளேவிடம் இருந்த பிசிசிஐ தொழில்நுட்ப கமிட்டி தலைவர் பதவி பறிக்கப்பட்டு செளரவ் கங்குலியிடம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Posts