மும்பையில் பதற்றம்: சிவசேனா தலைவர் சுடபட்டார்

மும்பையை சேர்ந்த சிவசேனா தலைவர் அனில் சவுகான் நேற்று அடையாளம் தெரியாத சில மர்ம மனிதர்களால் சுடப்பட்டார். நேற்று மாலை 8.15 மணிக்கு ஜனதா நகர் காஷ்மீரா பகுதியில் உள்ள மிரா சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது.

Shiv-Sena-leader-anil

அனில் சவுகான் உடனடியாக பகவத் வேதாந்தா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம மனிதர்கள் அனில் சவுகானின் தலையில் சுட்டு உள்ளனர். மர்ம நபர்கள் 2 ரவுண்டுகள் சுட்டு உள்ளனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.

இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் துணை கமிஷனர் அவினாஷ் ஆம்புரி தெரிவித்து உள்ளார். இந்த சம்பவம் முன் பகை காரணமாக நடைபெற்று இருக்கலாம் என கூறப்படுகிறது.

இது போல் நேற்று நாலச்சோப்ராவில் ரியல் எஸ்டேட் ஏஜெண்டு ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Posts