மும்பையில் சூர்யாவின் புதிய படத்துக்காக ரூ 4 கோடியில் பிரமாண்ட செட்!

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படம் 24-ன் படப்பிடிப்பு மும்பையில் இம்மாத இறுதியில் தொடங்குகிறது.

soorya

இந்தப் படத்துக்காக ரூ 4 கோடி செலவில் பிரமாண்டமாக மும்பையில் செட் போடப்பட்டுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது சூர்யா நடித்து வரும் மாஸ் படத்தின் ஷூட்டிங் அடுத்த வாரம் முடிந்துவிடுகிறது.

அதைத் தொடர்ந்து 24 படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்கிறார் சூர்யா. யாவரும் நலம், மனம் படங்களைத் தொடர்ந்து விக்ரம் குமார் இந்தப் படத்தை இயக்குகிறார். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இது முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகவிருக்கிறது.

சூர்யா இப்போது நடித்துக் கொண்டிருக்கும் மாஸ் படமும் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது.

Related Posts