முப்படையினருக்கு நன்றி தெரிவித்தார் ஜனாதிபதி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிளிநொச்சியில் வைத்து முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

போருக்கு பின்னர் மீள் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், இரணைமடு குளத்தின் வான் கதவுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இதன் நிறைவில் மக்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் ஜனாதிபதி முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “2198 மில்லியன் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் இக்குளம் புனரமைக்கப்பட்டுள்ளது.

முதலில் 131 ஏக்கர் கன மீற்றர் நீர் கொள்வனவாக காணப்பட்ட நிலையில், இந்த அபிவிருத்தியின் பின்னர் 148 மீற்றர் கன அடி கொள்வனவு கொள்ளகூடிய வகையில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. வளமான பொறியியலாளர்கள் என பல்வேறு பங்களிப்புடன் குறித்த குளத்தின் அபிவிருத்தி பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது.

1985ம் ஆண்டுக்கு பின்னர் இம்முறை பாரிய அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டு அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது முடிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அபிவிருத்தியின் மூலம் விவசாயிகள் மேலும் பல ஏக்கர் செய்கை மேற்கொள்ள முடியும்.

இது கிளிநொச்சி மாவட்ட மக்கள், விவசாயிகளிற்கு மாத்திரம் அல்லது வடக்கு மாகாண மக்களிற்கும் பெரும் ஆசீர்வாதமாக அமையும் என்பதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன். இவ்வாறானதொரு நிகழ்வில் நான் கலந்து கொள்வதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.

கடந்த 10 வருடங்களிற்கு முன் இப்பிரதேசத்தில் பாரிய யுத்தம் காரணமாக பல்வேறு துபன்பகரமான சம்பவங்கள் இடம்பெற்றன. இச்சந்தர்ப்பத்தில் முப்படையினர், பொலிசார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன்.

ஏனென்றால் பாரிய யுத்தம் ஒன்றை நிறைவுக்கு கொண்டு வந்தமைக்கு. இன்று நல்ல சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்று விவசாயிகள் இவற்றை பயன்படுத்தகூடிய சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.“ என தெரிவித்துள்ளார்.

Related Posts