முப்படையின் நிரந்த படையணிகளின் சிரேஸ்ட அதிகாரிகளின் சேவையை பாராட்டி சிறந்த சேவைக்கான விபூஷண பதக்கங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (08) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இலங்கை இராணவத்தின் தற்போதைய தளபதி லெப்டினட் ஜெனறல் கிரிஷாந்த டி சில்வா, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்த்ர விஜேகுணரத்ன, கடற்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள, ஓய்வுபெற்ற இராணுவ தளபதி ஜெனரல் ஆர்.எம். தயா ரத்நாயக்க, கடற்படையின் ரியல் அட்மிரல் கே.ஜே.சீ.எஸ். பெர்ணாண்டோ ஆகியோருக்கு ஜனாதிபதி சிறந்த சேவைக்கான விபூஷண பதக்கங்களை அணிவித்து கௌரவித்தார்.
இந்நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விஜேவர்தன, ஜனாதிபதி செயலாளர் பி.பி. அபேகோன், முப்படையின் உயரதிகாரிகள், பதக்கங்களை பெற்ற அதிகாரிகளின் குடும்பத்தினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.