முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பட்டமளிப்பு! தேர்தல் விதிமுறை மீறல்?

“ஆறுதல்” நிறுவனத்தில் முன்பள்ளி டிப்ளோமா கற்கை நெறிகளை பூர்த்திசெய்த முன்பள்ளி ஆசிரியைகளுக்கான பட்டமளிப்பு நிகழ்வு எதிர்வரும் 2013.09.08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் நடாத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன.

வடமாகாண சபைத் தேர்தலில் பொதுஜன ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் சுந்தரம் டிவகலாலா என்பவர் “ஆறுதல்” என்ற பெயரில் முன்பள்ளிக் கற்கை நெறிகளை வழங்கிவரும் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாவர்.இதற்கு பிரதம விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் காலங்களில் வேட்பாளர்ளால் இத்தகைய நிகழ்வுகள் நடாத்தப்படக் கூடாதென்ற விதிமுறைகளை மீறி தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளரால் மேற்கொள்ளப்படும் இத்தகைய சம்பவங்கள் குறித்து தேர்தல் ஆணையாளருக்கு தெரிவிக்கப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாகாண அரசால் சிறு கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றமையும் அதன்காரணமாக அவர்களும் பகுதியளவிலான ஒப்பந்த அடிப்படையிலான அரச சேவையாளர்களாகவே கருத்படவேண்டியவர்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related Posts