முன்னாள் போராளியின் வீட்டில் திருட்டு!

முன்னாள் போராளி ஒருவரின் வீட்டை உடைத்து பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டது என்று கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் இன்று காலை முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா, கனகராயன்குளம் பெரியகுளம் பகுதியில் உள்ள தனது வீட்டை உடைத்து ஒரு இலட்சத்து 45 ஆயிரம் ரூபா பணம் மற்றும் ஏழு பவுண் நகை, தண்ணீர் இறைக்கும் இயந்திரம், வீட்டு ஆவணங்கள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன” என்று கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் முன்னாள் போராளியான பேரம்பலம் வசந்தகுமார் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

தனக்குச் சொந்தமான காணியை அபகரிக்கும் நோக்கத்துடன் ஆக்கிரமித்திருக்கும் ஒருவருக்கு எதிராக வவுனியா நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கிற்கு முன்னிலையாக சென்றிருந்தவேளை, திருடர்கள் வீட்டை உடைத்து திருடியுள்ளனர் என்று அவர் தனது முறைப்பாட்டி ல் தெரிவித்துள்ளார்.

இக்கொள்ளைச்சம்பவம் தொடர்பாக வவுனியா தடவியியல் பொலிஸார் மற்றும் கனகராயன்குளம் பொலிஸார் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts