புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு இரசாயன ஊசி போடப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து பரிசோதிக்க சர்வதேச ரீதியான தலையீடு தேவையற்றது என, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
வௌிநாட்டு வைத்தியர்களை அழைத்து வர முன்னர் வடக்கிலுள்ள வைத்தியர்களுக்கே அது பற்றி பரிசோதிக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.