Ad Widget

முன்னாள் போராளிகள் புற்று நோயால் மரணமடைவதற்கு எதிராக பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் மரணமடைவதற்கு நீதி கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று பிரித்தானியாவில் இடம்பெற்றது.

நேற்று பிரித்தானிய நேரம் மதியம் 12 தொடக்கம் 4 மணி வரை இல 10, என்னும் இடத்தில் இக் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

இறுதி யுத்தத்தின் பின் 2009 ஆம் ஆண்டு இராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்களில் 104 பேர் வரையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் மரணமடைந்தனர்.

இன்னும் பலர் இடுப்புக்கு கீழ் இயங்க முடியாத நிலையில் உள்ளனர். இவை பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இவை தொடர்பில் நீதியான முறையில் சர்வதேச விசாரணை ஒன்று இடம்பெற வேண்டும்.

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த போராட்ம் இடம்பெற்றது. நாடு கடந்த தமிழீழ அரசின் ஏற்பாட்டில் நடந்த இப் போராடம்டத்தில் ஈழ உணர்வாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Related Posts