முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள்!

புனர்வாழ்வு அதிகார சபையினால் 36 முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

கிளிநொச்சியில் அமைந்துள்ள ஒத்துழைப்பு மையத்திலேயே குறித்த நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 36 பேருக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் புனர்வாழ்வு நாயகம் மேஜர் ஜெனரல் ஜனக ரத்நாயக்க, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், கிளிநொச்சி படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிபிரிய உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts