முன்னாள் போராளிகளின் உதவியுடன் தேர்தலில் சாதிக்க கூட்டமைப்பு முயற்சி!

முன்னாள் தமிழீழ விடுதலை புலி உறுப்பினர்களின் உதவியுடன் உள்ளூரட்சி மன்றத் தேர்தலை வெற்றிக் கொள்ளும் முயற்சியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இறங்கியுள்ளனர்.

அந்தவகையில், கூட்டமைப்பினருக்கும் முன்னாள் போராளிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (புதன்கிழமை) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக விவாதிக்கப்பட்ட இந்த சந்திப்பில், கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர்.

முன்னாள் தமிழீழ விடுதலை புலி உறுப்பினர்கள் மீது, தமிழ் மக்கள் இன்னும் நல்லெண்ணத்தை கொண்டுள்ள நிலையில், அதனை உபயோகித்து தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்வதில் கூட்டமைப்பு கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts