முன்னாள் புலி உறுப்பினரின் சகோதரருக்கு விளக்கமறியல்

கொழும்பில் உள்ள தாமரைத் தடாக வளாகத்தில், சந்தேகத்துக்கிடமான முறையில் நடந்துகொண்ட முன்னாள் புலி உறுப்பினரின் சகோதரரை, எதிர்வரும் 17ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற நிகழ்வொன்றில் சுத்திகரிப்பு வேலையைச் செய்துகொண்டு மிகவும் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய முன்னாள் புலி உறுப்பினரின் சகோதரரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட மேற்படி சந்தேகநபர், கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார முன்னிலையில் 13ஆம் திகதி திங்கட்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார்.

யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்ட முருகையா சர்மலன் என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகத்துக்கிடமான முறையில் கைதுசெய்யப்பட்ட அவரை சோதனைக்கு உட்படுத்திய போது, அவருடைய தேசிய அடையாள அட்டைக்கு மேலதிகமாக, தன்னுடைய சகோதரியுடையது எனக்கூறப்படும், புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரின் அடையாள அட்டையும் மீட்கப்பட்டுள்ளது.

Related Posts