முன்னாள் தவிசாளர் கைது!!

தீவகத்தில் முறையற்ற வகையில் பரம்பரை காணியை மோசடியான முறையில் தனது பெயருக்கு உரிமம் மாற்றிய குற்றச்சாட்டில் நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Arrested man in handcuffs with hands behind back

அவரது மோசடிக்கு துணை நின்றனர் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

12 சகோதரங்கள் இடையே பிரிவிடல் செய்யப்பட்டவேண்டிய ஆதனத்தை ஒரு சகோதரர் மட்டும் முறையற்ற வகையில் தனது பெயருக்கு மாற்றிய குற்றச்சாட்டில் நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் நேற்று (23) கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினர்.

நெடுந்தீவு உள்ள ஆதனம் 12 சகோதரர்கள் இடையே பிரிவிடல் செய்யப்பட வேண்டும். எனினும் அந்த ஆதனத்தை சகோதரர் ஒருவர் சட்டத்துக்குப் புறம்பாக தனது பெயருக்கு மாற்றியுள்ளார்.

வெளிநாட்டில் வசிக்கும் மற்றைய சகோதரர் ஒருவர் பங்கு ஆதனம் சட்டத்துக்கு புறம்பாக மோசடியாக விற்பனை செய்துள்ளமையை அறிந்து யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பில் மாவட்ட விசேட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி குணறோயன் தலமையிலான குழுவினர் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அதன் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், மோசடியாக ஆதனத்தை உரிமம் மாற்றிய நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் நல்லதம்பி சசிகரன் என்பவரை கைது செய்தனர்.

அவரது மோசடியாக முடிக்கப்பட்ட உறுதிக்கு சாட்சிக் கையொப்பமிட்ட முன்னாள் கோட்டக்கல்விப் பணிப்பாளர் மற்றும் ஒருவரும் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் மூவரும் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்படவுள்ளனர்.

Related Posts