முன்னாள் ஜாம்பவான்கள் மோதும் கண்காட்சி கிரிக்கெட் போட்டி

இலங்கை அணியின் சனத் ஜெயசூரியா, மேற்கிந்திய தீவுகள் அணியின் பிரைன் லாரா ஆகியோர் கட்டாரில் இடம்பெறவுள்ள கண்காட்சி கிரிக்கெட் போட்டியில் மோதவுள்ளனர்.

lara-sanath

டோஹா, கட்டாரிலுள்ள வெஸ்ட் எண்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் முன்னாள் ஜாம்பவான்களான லாரா, ஜெயசூரியா ஆகியோரின் அணிகள் கண்காட்சி கிரிக்கெட் போட்டியில் இம் மாதம் 6ஆம் திகதி மோதவுள்ளன.

இந்நிலையில் உலக லெவன் அணிக்கு மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாராவும் ஆசிய லெவன் அணிக்கு இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் சனத் ஜயசூரியாவும் தலைமை தாங்குகின்றனர்.

உலக லெவன் அணி அணி விபரம்:

பிரையன் லாரா (அணித்தலைவர், மேற்கிந்திய தீவுகள்), பிரெண்டன் டெய்லர் (சிம்பாப்வே), கிப்ஸ் (தென்னாபிரிக்கா), ரிக்கி வெசல்ஸ் (அவுஸ்திரேலியா), ஓவைஸ் ஷா (இங்கிலாந்து), டேமியன் மார்ட்டின் (அவுஸ்திரேலியா), கோரே கோல்ய்மொரே (மேற்கிந்திய தீவுகள்), சாமுவேல் பத்ரி (மேற்கிந்திய தீவுகள்), சாஜ் மஹ்மூத் (இங்கிலாந்து), ரியான் டென் டசாட்டே (நெதர்லாந்து).

ஆசிய லெவன் அணி விபரம்:

சனத் ஜெயசூரியா (அணித்தலைவர், இலங்கை), தமிம் இக்பால் (பங்களாதேஷ்), இம்ரான் நசீர் (பாகிஸ்தான்), மாவன் அத்தப்பத்து (இலங்கை), ஆகாஷ் சோப்ரா (இந்தியா), அஞ்சலோ பெரேரா (இலங்கை), மஹேல ஜெயவர்தனே (இலங்கை), அப்துல் ரசாக் (பாக்கிஸ்தான்), ரஷீத் லத்தீப் (பாகிஸ்தான்), யஸீர் அரபாத் (பாகிஸ்தான்), முகமது சமி (பாகிஸ்தான்).

Related Posts