முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழிற்கு விஜயம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வீரசிங்கம் மண்டபத்தில், காலை 11 மணியளவில் ஆரம்பமான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முண்ணனியின் வேட்பாளர்களை ஆதரிக்கும் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவே அவர் வருகைதந்தார்.

கடந்த 2015ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்ததன் பின்னர் தேர்தல் பரப்புரைகளுக்காக இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts