கனிய வள அமைச்சர் வழங்கிய வாக்குறுதிகளின் நடைப்பெறாவிட்டால் முன்னறிவித்தல் இன்றி மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்படவுள்ளதாக கனிய எண்ணெய் சார் தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது.
அதன் இணைப்பாளர் டி.ஜே ராஜகருணா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் மேற்கொள்ளப்பட்ட பணிப்புறக்கணிப்பு அரசாங்கத்தின் இணக்கப்பாட்டிற்கு அமைய தற்காலிமாக விலக்கிக்கொள்ளப்பட்டது.
அதன்பின்னர் அரசாங்க தரப்பில் இருந்து எந்த விதமான உறுதி மொழிகளும் விடுக்கப்படவில்லை.
இந்தநிலையில், தமது பிரச்சினைக்கு ஒருவார காலத்திற்குள் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் இருந்து தீர்வு பெற்று தருவதாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் உறுதியளித்தார்.
தமக்கான தீர்வு கிடைக்காவிட்டால் முன்னறிவித்தல் இன்றி எதிர்வரும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்படபோவதாக டி.ஜே ராஜகருணா குறிப்பிட்டார்