முன்னரங்க வேலியை பின் நகர்த்தப் பணிப்பு

வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள், இன்னமும் பாதுகாப்பு முன்னரங்க வேலி பின்நகர்த்தப் படவில்லை. இதனை நகர்த்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நேற்று ராணுவத்தினருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

வலி.வடக்கு, வலி.கிழக்கு உயர் பாதுகாப்பு வலயங்களினுள் 6 கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களை மீளக்குடியமர்த் துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு முன்னோடியாக, விடுவிக்கப்படவுள்ள பிரதேசங்களை மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், அமைச்சின் செயலாளர், அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், பிரதேச செயலாளர்கள் ஆகியோர் நேற்றுக் காலை 8.30 மணிக்குச் சென்று நேரில் பார்வையிட்டனர்.

இதன்போது, விடுவிக்கப்படவுள்ள பகுதி முழுவதையும் அவர்கள் பார் வையிட்டுள்ளனர். பற்றைக் காடுகளாகவே பெரும்பாலான பிரதேசங்கள் காணப்படுகின்றன. வளலாயில் ஒரு பகுதி மாத்திரமே துப்புரவு செய்யப்பட்ட நிலையில் உள்ளது.

மேலும், வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தை எல்லைப் படுத்தி அமைக்கப்பட்டிருந்த நிரந்தர பாதுகாப்பு வேலிக்குரிய தூண்கள் எதுவும் அகற்றப்படவில்லை.

அத்துடன் உள்ளே அமைக்கப்பட்டிருந்த முன்னரங்க பாதுகாப்பு வேலியும் இன்னமும் அகற்றப்பட வில்லை.

இவற்றை உடனடியாக அகற்று மாறு, மீள்குடியேற்ற அமைச்சர், இராணுவத்தினருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். அத்துடன் மூன்று வாரங்களுக்குள் மக்களைக் குடியமர்த்துவதற்குரிய வகையில் சகல ஏற்பாடுகளையும் மேற் கொள்ள வேண்டும் எனவும் அவர் இதன் போது தெரிவித்துள்ளார்.

Related Posts