முன்அறிவிப்பு இன்றி பணி நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள வைத்தியர்கள்

தமது பிரச்சினைகளுக்கு எதிர்வரும் வாரத்திற்குள் தீர்வு கிடைக்காவிட்டால் முன்அறிவித்தல் இன்றி வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.

நேற்று இடம்பெற்ற அவசர மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் வௌியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் எதிர்வரும் 22ம் திகதிக்குப் பின்னர் முன் அறிவிப்பு இன்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அவர்கள் கூறயுள்ளனர்.

Related Posts