ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன படிகள் வைத்து செய்யப்பட்ட குழிக்குள் இறங்கி செடி ஒன்றுக்கு தண்ணீர் ஊற்றும் புகைப்படம் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
மைத்திரிபால சிறிசேன மாத்திரமல்லாது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் இவ்வாறே தற்காலிகமாக படிகள் வைத்து செய்யப்பட்ட குழிக்குள் இறங்கி செடிக்கு தண்ணீர் ஊற்றியது புகைப்படம் ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஆகியோர் தரைக்கு மேலில் இருந்து குனிந்து செடிகளை நாட்டும் புகைப்படங்கள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.