முதுகல்வி மாணிகற்கைக்கு விண்ணப்பம் கோரல்

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கல்விப்பீடத்தினால் முதுகல்வி மாணி நிகழ்ச்சித்திட்டத்திற்கு புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி மாணி பட்டம் பெற்றவர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் விசேட அல்லது திறமைச்சித்தியுடன் கூடிய பட்டமேற்கல்வி டிப்ளோமா பட்டம் பெற்றவர்கள் அல்லது இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பட்ட மேற் கல்வி டிப்ளோமாவில் உரிய தகைமையை பூர்த்தி செய்தவர்கள் இக் கற்கைக்கு விண்ணப்பிக்க முடியும்.

இக்கற்கை நெறியானது கொழும்பு பிராந்திய நிலையத்தில் மட்டுமே நடாத்தப்படும் என்றும் விண்ணப்பப்படிவங்களை அடுத்த மாதம் 7 ஆம் திகதிக்கு முன்னர் பிறவுண் வீதி கொக்குவிலில் அமைந்துள்ள யாழ். பிராந்திய நிலையத்தில் பெற்றுக் கொள்ளலாம் எனவும் உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Related Posts