முதுகல்விமாணிக் கற்கைநெறி ஜனவரி முதல் யாழ்ப்பாணத்தில்

தேசிய கல்வி நிறுவகம் நடத்தும் முதுகல்விமாணிக் கற்கை நெறி முதன்முறையாக யாழ்.மாவட்டத்தில் எதிர்வரும் 19ம் திகதி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.கல்விவாண்மை, அனுபவம் கொண்ட தகுதியானவர்களைக் கொண்டு இந்தக் கற்கைநெறிக்கான விரிவுரைகள் இடம்பெறவுள்ளன.யாழ். மாவட்டத்தில் உள்ள திறந்த பல்கலைக்கழகம், யாழ்.பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் உள்ள விரிவுரையாளர்கள் மட்டுமே இதற்கு விரிவுரையாற்ற வேண்டும் என்ற மட்டுப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையங்களுக்கு வெளியே உள்ள தகுதியானவர்களும் விரிவுரையாளர்களாக இணைத்துத்கொள் ளப்படவுள்ளனர்.

விரிவுரையாளர்கள், இணைப்பாளர் பதவிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முகத்தேர்வும் இடம்பெற்றுள்ளது.

இந்தக் கற்கை நெறி, கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன, தேசிய கல்வி நிறுவனப் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் டபிள்யூ.எம். அபேரத்ன பண்டார ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இந்தக் கற்கை நெறி இதுவரைகாலமும் தேசிய ரீதியில் மகரகமவில் மட்டும் நடத்தப்பட்டு வந்தது. இந்த முறை கூடுதலாக வடக்கிலிருந்து மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்.மாவட்டத்தில் போதிய கல்வித் தத்துவமாணி, கல்வி முதுமாணிப் பட்டம் பெற்ற தகுதியானவர்கள் உள்ளனர் எனச் சுட்டிக் காட்டி அதனை இங்கு ஆரம்பிக்குமாறு தேசிய கல்வி நிறுவன முதுநிலை நிபுணத்துவ ஆலோசகர் கலாநிதி நாகமுத்து தணிகாசலம் பிள்ளை கல்வி அமைச்சிடம் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனை அடுத்தே கற்கை நெறி யாழ்ப்பாணத்தில் ஆரம்பிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறி விக்கப்பட்டுள்ளது.

Related Posts