முதியோர் இல்லத்தில் பிறந்த நாள் கொண்டாடிய காஜல்அகர்வால்!

1985-ம் வருடம் ஜூன் 19-ந்தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் பிறந்தவர் நடிகை காஜல்அகர்வால்.

கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் செய்து கொண்டிருந்தவர், ஹைங் கோ ஹையானா என்ற இந்தி படத்தில் தங்கை வேடத்தில் அறிமுகமானார். அதையடுத்து லட்சுமி கல்யாணம் என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக உயர்ந்தார்.

Kajaa-agarvaall

பின்னர், பரத் நடித்த பழனி படத்தில் தமிழுக்கு வந்த காஜல்அகர்வால், சரோஜா, பொம்மலாட்டம் என்று தென்னிந்திய சினிமாவில் பிசியாகி விட்டார்.

அந்தவகையில், அவர் நடிக்க வந்து 10 வருடங்கள் ஆகி விட்டது. சினிமாவில் தனக்கு வரவேற்பு தொடர்ந்து இருப்பதால், தங்கை நிஷா அகர்வால் திருமணம் செய்து கொண்டபோதும் தனது திருமணத்தை தள்ளி போட்டு வருகிறார் காஜல்அகர்வால்.

மேலும், தனது ஒவ்வொரு பிறந்த நாளையும் ஆடம்பரமில்லாமல் எளிமையாக கொண்டாடி வரும் காஜல், தனது 29 வது பிறந்த நாளை கடந்த ஜூன் 19ந்தேதி அன்று எளிமையாக மும்பையிலுள்ள ஒரு முதியோர் இல்லத்தில் கொண்டாடியுள்ளார்.

அன்றைய தினத்தில் அங்குள்ள முதியோர்களுக்கு காலை, மதியம் என இரண்டு வேளையும் தனது கையால் உணவு பரிமாறி மகிழ்ந்துள்ளார் காஜல்அகர்வால்.

Related Posts