முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

தம்புள்ளையில் நடைபெற்ற போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி தலைவர் விராட் கோலி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார்.

அதற்கமைய முதலில் களமிறங்கிய இலங்கை அணி 43.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 216 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பாக டிக்வெல்ல 64 ஓட்டங்களையும், எஞ்சலோ மெத்தியூஸ் ஆட்டமிழக்காது 36 ஓட்டங்களையும் பெற்று கொடுத்தனர்.

பந்துவீச்சில் இந்திய அணி வீரர் அஸ்ஹர் பட்டேல் மூன்று விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 28.4 ஓவர்களில் 220 ஓட்டங்களைப் பெற்றுஒரு விக்கட்டை மாத்திரம் இழந்தது.

அந்த அணி சார்பாக ஷீகர் தவான் ஆட்டமிழக்காமல் 132 ஓட்டங்களையும் கோலி ஆட்டமிழக்காமல் 82 ஓட்டங்களையும் பெற்றனர்.

அதன்படி இந்திய அணி முதல் போட்டியில் 09 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

Related Posts