முதல்வர் முன்னிலையில் ஷாருக்கானுடன் குத்தாட்டம் ஆடிய பெண் போலீஸ். பெரும் சர்ச்சை

இந்தியாவின் மேற்குவங்க பெண் முதலமைச்சர் மம்தா பானர்ஜி முன்னிலையில் பெண் போலீஸ் ஒருவரை கையால் தூக்கி குத்து நடனம் ஆடி நடிகர் ஷாருகான் தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

sharukkan-women-police-1

நேற்று நாடு முழுவதும் ரக்‌ஷா பந்தன் விழா கொண்டாடப்பட்டது. பெண்கள் தாங்கள் சகோதரர்களாக கருதுபவர்களுக்கு ராக்கி கட்டி மகிழ்ந்து கொண்டாடும் திருநாள் இது. நேற்று கொல்கத்தா நேதாஜி மைதானத்தில் இந்த ரக்‌ஷா பந்தன் விழா இனிதே கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நடிகர் ஷாருக்கானுக்கு ராக்கி கயிறு கட்டினார்.

sharukkan-women-police

இந்த நிகழ்ச்சியில் குத்து பாட்டு ஒன்றுக்கு நடனம் ஆடிய நடிகர் ஷாருகான், திடீரென யாரும் எதிர்பார்க்காத நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் ஒருவரை தூக்கி கொண்டு ஆடினார். இதனால் அந்த பெண் போலீஸ் சற்று நேரம் அதிர்ச்சிக்குள்ளானார். பின்னர் அவரும் குஷியாகி ஷாருக்கானுடன் நடனம் ஆடினார்.

இந்த சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.”போலீஸ் யூனிபார்மில் இருந்த ஒரு பெண் போலீஸை எப்படி ஷாருக்கான் தூக்கி ஆடலாம் என்றும், பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் முதல்வர் முன்னிலையில் மேடையில் குத்துநடனம் நடனமாட யார் அனுமதித்தது என்றும் மேற்குவங்க பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ரிதிஷ் திவாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதே பிரச்னையை காங்கிரஸ் கட்சியும் எழுப்பியுள்ளது. ஆனால், இது எதார்த்தமாக நடந்தது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும் இது தொடர்பாக சம்பத்தப்பட்ட பெண் போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

Related Posts