முதல்வர் ஜெயாவின் உடல்நிலை முன்னேற்றம் : மருத்துவமனை வட்டாரம் தகவல்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை தேறி வருவதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் அப்பல்லோ மருத்துவமனையினால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த மாதம், 22 ஆம் திகதி முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். மேலும் நுரையீரல் பாதிப்புக் காரணமாக அவருக்கு சுவாசிப்பதில் சிரமங்கள் இருந்ததாகவும் கூறப்பட்டது.

இதேவேளை முதலவர் ஜெயாவுக்கு சிறப்பு சிகிச்சையளிக்க லண்டனில் இருந்து மருத்துவர் குழு வரவழைக்கப்பட்டது என்ற தகவல் கிடைக்கப் பெற்ற பொதுமக்கள் மூத்தவரின் நிலை என்ன என்பது குறித்து அறிய முற்பட்டதுடன் மிகவும் கவலையடைந்தனர்.

இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனையினால் வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில் ஜெயலலிதா அப்பல்லோவில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் எனவும், அவருக்கு நோய் தொற்று உள்ளது எனவும் இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Related Posts