முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம்

தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் இன்று பிற்பகல் 1.25 மணியளவில் பதவியேற்றுக் கொண்டார்.

o-panneerselvam

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற எளிமையான பதவியேற்பு விழாவின்போது அவருக்கு ஆளுநர் ரோசய்யா பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

பதவிப்பிரமாண சத்தியப் பிரமாணத்தை வாசித்தபோது அவரது குரல் தழுதழுத்தபடி இருந்தது. அவர் உள்பட அனைவருமே சோகத்துடன் காணப்பட்டனர். அந்த அரங்கமே இறுக்கமாக காணப்பட்டது. கடவுளின் பெயரால் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் பன்னீர் செல்வம்.

ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்த 30 பேரும் மீண்டும் அமைச்சர்களாகியுள்ளனர். அனைவரும் பதவிப்பிரமாணம் எடுத்து வருகின்றனர். முதல் அமைச்சராக நத்தம் விஸ்வநாதன் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

பதவியேற்பின்போது பல அமைச்சர்கள் கண்ணீர் மல்க, லேசாக அழுதபடி பதவியேற்றது பரபரப்பாக இருந்தது.

பதவியேற்பு விழாவில், தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். பிற கட்சித் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடைபெற்றது.

Related Posts