இளைய தளபதி முதன் முறையாக சிம்புதேவன் இயக்கத்தில் நடித்து வரும் படம் புலி. இப்படம் அரசர் காலத்து கதை என்பதால், தமிழ் உச்சரிப்பு மிக சுத்தமாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் எண்ணியுள்ளார்.
இதனால், ஸ்ருதி, ஸ்ரீதேவி, ஹன்சிகா ஆகியோர் மிகுந்த பயிற்சி எடுத்து வருகின்றனர். மேலும், விஜய்யும் முதன் முறையாக சுத்தமான தமிழில் பேசவிருக்கிறாராம்.
மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் மைசூர் அரண்மனையில் நடந்து முடிந்தது, கூடிய விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கு படக்குழு தயாராகி வருகிறது.