இந்தியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது போட்டி கொல்கொத்தாவில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது.
நேற்றய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
இதன்படி களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 201 ஓட்டங்களை பெற்றது.
பாகிஸ்தான் அணி சார்பாக மொஹமட் ஹபீ்ச (Mohammad Hafeez) 64 ஓட்டங்களையும் அஹமட் செஷாத் (Ahmed Shehzad) 52 ஓட்டங்களையும் பெற்றனர்.
பங்களாதேஷ் அணி சார்பாக பந்துவீச்சில் தஸ்கின் அஹமட் (Taskin Ahmed), அறபாத் சன்னி (Arafat Sunny) ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
202 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்களை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது.
பங்களாதேஷ் சார்பாக துடுப்பாட்டத்தில் ஷக்கிப் அல் ஹசன் 50 ஓட்டங்களையும் சபிர் றஹ்மான் 25 ஓட்டங்களையும் தமிம் இக்பால் 24 ஓட்டங்களையும் பெற்றனர்.
பாகிஸ்தான் பந்துவீச்சில் மெஹமத் ஆமிர், ஷஹித் அப்றிடி ஆகிய இருவரும் தலா 27 ஓட்டங்களுக்கு தலா 2 விக்கட்களை வீழ்த்தினர்.
போட்டியின் ஆட்டநாயகனாக சயிட் அப்பரிடி தெரிவு செய்யப்பட்டார்.