லங்கா பிரீமியர் லீக் தொடரின் முதலாவது போட்டியில் கொழும்பு ஸ்டைக்கேர்ஸ் அணியை வீழ்த்தி ஜப்னா கிங்ஸ் அணி முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது
லங்கா பிரீமியர் லீக்கின் ஆரம்ப போட்டி ரசிகர்களின் பெரும் எதிர்பபார்ப்புக்கு மத்தியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக ஆரம்பமாகியது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு ஸ்டைக்கேர்ஸ் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 173 ஓட்டங்களை பெற்றது.
அவ்வணி சார்பாக தவ்ஹீத் ஹ்ரிடோய் 54 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க பந்து வீச்சில் கொழும்பு ஸ்டைக்கேர்ஸ் அணி சார்பாக நசீம் ஷா, மதீஷ பதிரன, சாமிக கருணாரத்ன மற்றும் சந்தகன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு ஸ்டைக்கேர்ஸ் அணி 19.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 152 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இதனால் லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணி 21 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது. கொழும்பு ஸ்டைக்கேர்ஸ் அணி சார்பாக டிக்வெல்ல 58 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார்.
பந்துவீச்சில் விலஜோன் 3 விக்கெட்களையும் வியாஸ்காந்த் மதுஷங்க ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும் பெரேரா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாக வியாஸ்காந் தெரிவானார்.